கம்யூனிஸ்ட்டாக நடித்த கீர்த்தி சுரேஷ்
ADDED : 869 days ago
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் நடித்துள்ள ‛மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாய் நடந்தது. கமல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ் : ‛‛நீண்ட நாள் கழித்து தமிழில் எனது படம் வெளியாக போவது மகிழ்ச்சி அளிக்கிறது. நிச்சயம் படம் வேற மாதிரி இருக்கும். படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட்டாக வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளேன். நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். பொதுவான ஒரு விஷயத்தை பற்றியே பேசி உள்ளோம். படப்பிடிப்பில் சிரித்துக் கொண்டே ஜாலியாக இருந்தோம். ஆனால் படம் ஜாலியாக இருக்காது, கொஞ்சம் சீரியஸான படமாக இருக்கும்'' என்றார்.