கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல்
ADDED : 900 days ago
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு என பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் மாமன்னன். இந்த படத்தின் இசை விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, இந்த மேடையில் பேசிய அனைவரும் கீர்த்தி சுரேஷின் அழகை பாராட்டினார்கள். ஆனால் அழகு என்பது கொஞ்சம் மேக்கப் போட்டுக் கொண்டால் வந்துவிடும். அழகும் அறிவும் சேர்ந்து இருக்க வேண்டும் அதுதான் பேரழகு. அது கீர்த்தி சுரேஷுக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் படங்களை பார்க்கும் போது அவருக்கு அழகும் அறிவும் இருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது என்றார்.