மேலும் செய்திகள்
நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2'
827 days ago
செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு
827 days ago
மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி தமிழில் ஆக்ஷன் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கார்கி, கேப்டன் படங்களில் நடித்தவருக்கு கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் 1, 2 படங்கள் புகழ் வெளிச்சம் தந்தது. தற்போது மூன்று மொழிகளில் அவர் நடித்து வருகிறார். ஐஸ்வர்ய லட்சுமி ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛நான் ஒரு டாக்டர். எம்பிபிஎஸ் படித்துள்ளேன். ஆனால் சினிமாவில் உள்ளேன். இது கடவுளின் விருப்பம் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் சினிமாவிற்கு வருவேன், நடிகையாவேன் என ஒரு போதும் நினைத்துகூட பார்க்கவில்லை. படித்து முடித்ததும் ஒரு வேலைக்கு செல்வதே சமூக அந்தஸ்து, சினிமா அப்படிப்பட்டது அல்ல என எனது குடும்பத்தினர் எண்ணினர். காரணம் சினிமா பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயம் அவர்களுக்கு அப்படி எண்ண தோன்றியது. இருப்பினும் அதையெல்லாம் கடந்து சினிமாவிற்கு வந்தேன். சினிமாவில் நிறைய எதிர்ப்புகளை சந்தித்தேன். சினிமாவிற்கு வருவது எளிதானது அல்ல. ஒவ்வொரு நாளும் போராட்டமே'' என்றார்.
827 days ago
827 days ago