உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் கதாநாயகனாகும் பிரபல நடிகர்

மீண்டும் கதாநாயகனாகும் பிரபல நடிகர்

நடிகர் குரு சோமசுந்தரம் குணசித்திர நடிகராக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக மலையாளத்தில் மின்னல் முரளி படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். ஒரு சில வருடங்களுக்கு முன்பு அவர் 'ஜோக்கர்' படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதையின் நாயகனாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது; அடுத்து ஒரு புதிய படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன். இயக்குனர் தினகரன் இயக்கும் இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நடராஜன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்.

இது அல்லாமல், மலையாளத்தில் மோகன்லால் இயக்கியுள்ள 'பரோஸ்' படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளேன். தமிழில் 'இந்தியன் 2' படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இப்பொழுது மொழியை கடந்தது சினிமா மற்ற மொழி பார்வையாளர்களுக்காக அந்தந்த மொழி நடிகர்கள் தேவைப்படுவது கலைஞர்களுக்கு நல்லது என்று இவ்வாறு குரு சோமசுந்தரம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !