உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் 68வது படத்தின் டைட்டில் சிஎஸ்கே... வா?

விஜய் 68வது படத்தின் டைட்டில் சிஎஸ்கே... வா?

லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68 வது படத்தில் நடிக்க போகிறார் விஜய். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என தெரிகிறது. இந்த படத்தின் பூஜை, விஜய் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி நடைபெறுவதோடு, ஜூலை மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு. இந்த நிலையில் விஜய் 68 வது படத்தின் டைட்டில் குறித்த சில தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த படத்திற்கு வெங்கட் பிரபு, சிஎஸ்கே என்று டைட்டில் வைத்திருக்கிறாராம். தற்போது தமிழ்நாட்டு ரசிகர்கள் விரும்பும் அணியாக சிஎஸ்கே இருப்பதால் இந்த டைட்டிலை வெங்கட் பிரபு தேர்வு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !