மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
821 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
821 days ago
லைட் ஹவுஸ் மீடியா சார்பில் அறிமுக இயக்குநர் அஜித்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'முகை'. ஆடுகளம் கிஷோர் , ஆர்ஷா சாந்தினி பைஜூ நடித்துள்ளனர். இதில் ஆர்ஷா சாந்தினி யு டியூப் மூலம் பிரபலமானவர். இவரது நடனம் மற்றும் பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது சினிமாவில் ஹீரோயின் ஆகிவிட்டார். மலையாள படங்களில் நடித்துள்ள இவர் இந்தப்படம் மூலம் தமிழில் களமிறங்கி உள்ளார். படத்திற்கு சக்தி இசை அமைக்கிறார், அர்ஜூன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆர்ஷா சாந்தினி கூறும்போது “இயக்குநர் அஜீத் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். என் மீது நம்பிக்கை வைத்த குழுவினருக்கு நன்றி. படம் வந்ததும் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்” என்றார்.
இயக்குநர் அஜித்குமார் கூறும்போது “இது என் முதல் படம், என் குடும்பத்திற்கு என் நன்றி. என் தயாரிப்பாளருக்கு என்னுடைய மிகப்பெரும் நன்றி. நாயகி நடித்த ஒரு யூடியூப் வீடியோ பார்த்து அவரை தேர்வு செய்தேன். மிக நன்றாக நடித்துள்ளார். ஒரே இடத்தில் நடக்கும் கதை. என்னை நம்பி உழைத்த என் படக்குழுவிற்கு நன்றி” என்றார்.
821 days ago
821 days ago