மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
821 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
821 days ago
பீட்டர் ராஜின் ப்ரோகன் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் புவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பெல். இதில் குருசோம சுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பரணி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட் இசை அமைத்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் வெங்கட் புவன் கூறியதாவது: பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியர், பாதுகாக்கப் படவேண்டிய 6 மருத்துவ ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய 6 சீடர்களுக்குச் சொல்லி அதை பாதுகாக்க கட்டளை இட்டார். அவரது சீடர்களில் மூன்று பேர் அந்த மருத்துவ குறிப்புகளை வைத்து மக்களுக்கு நண்மை செய்தர். மற்றவர்கள் அதனை வியாபாரமாக்கினார்கள். அந்த போராட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதை மையமாக வைத்துதான் இந்த படம் உருவாகி உள்ளது. வில்லனாக வரும் குருசோமசுந்தரம் மனிதனுக்கு ஆயுளை கூட்டும் மருந்தை கார்பரேட் கம்பெனிக்கு விற்க முயற்சிக்கிறார். அதை ஹீரோ எப்படி தடுக்கிறார் என்பதுதான் கதை. நான்லீனியர் முறையில் காதல், குடும்பம், ஆக் ஷன் என அனைத்து அம்சங்களும் மிகச் சரியான விகிதத்தில் கலந்த கலவையாக அனைத்து வயதினருக்கும் ஏற்ற படமாக இருக்கும். என்றார்.
821 days ago
821 days ago