தமிழ் படங்களுக்கு நோ சொன்ன இளம் நடிகை
ADDED : 862 days ago
தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலா. கன்னடத்தில் 'கிஸ்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு தமாகா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு நுழைந்தார். தற்போது தெலுங்கில் 6 படங்களில் நடித்து வருகிறார். மகேஷ்பாபு, ராம் பொத்தினேனி, நிதின், பவன் கல்யாண் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ் படங்களில் ஸ்ரீ லீலாவை நடிக்க வைக்க பலரும் அவரை அணுகியபோது இப்போது பிஸியாக நடித்து வருகிறேன், அதனால் கால்ஷீட் இல்லை என்று கூறுகிறாராம். சமீபத்தில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு அவரை கதாநாயகியாக நடிக்க கேட்டபோது கால்ஷீட் பிரச்சினை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.