மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
819 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
819 days ago
கடந்த 2016ல் மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் அறிமுகமான மூன்று நடிகைகளில் அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். மலையாளத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கில் மட்டும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். குறிப்பாக கடந்த வருடம் இவரின் நடிப்பில் வெளியான கார்த்திகேயா 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது தெலுங்கில் தில்லு ஸ்கொயர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்.
இதை தொடர்ந்து தற்போது மீண்டும் மலையாள 'ஜானகி வி/எஸ் ஸ்டேட் ஆப் கேரளா' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தில் இதுநாள் வரை நடித்து வந்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இந்த படத்தில் நடிகர் சுரேஷ்கோபி வழக்கறிஞராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜெய்பீம், நேர்கொண்ட பார்வை படங்களில் பாணியில் ஒரு நீதிமன்ற கதைக்களத்தில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் சுரேஷ்கோபியின் இளைய மகன் மாதவ் சுரேஷும நடிகராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
819 days ago
819 days ago