மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
819 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
819 days ago
மலையாளத்தில் மம்முட்டியுடன் கசபா மற்றும் மோகன்லாலுடன் முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை நேஹா சக்சேனா. உத்தர்காண்டை சேர்ந்த இவர் தென்னிந்திய படங்களில் நடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக மலையாள திரையுலகில் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் பேப்பட்டி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நேஹா சக்சேனா. இந்த படத்தில் சுல்தானா என்கிற இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.
இதில் தனது குடும்பத்தை பாதுகாக்க தனி ஒரு பெண்ணாக போராட்டம் நடத்தும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளாராம். இஸ்லாமிய பெண் என்பதால் இஸ்லாமிய முறைப்படி நமாஸ் செய்வது குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் மொய்தீனிடம் முறைப்படி கற்றுக்கொண்டு அந்த காட்சிகளில் நடித்துள்ளார். புர்கா அணிந்தபடி தான் நமாஸ் செய்யும் ஒரு புகைப்படத்தையும் தற்போது சோசியல் மீடியாவில் இவர் வெளியிட்டுள்ளார். இதற்கு பெரும்பாலானோர் பாசிட்டிவான கமெண்ட்டுகளை பதிவிட்டு இருந்தாலும் ஒரு சிலர் வழக்கம் போல சர்ச்சை கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்த அதா சர்மா மற்றும் பர்ஹானா படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இதுபோன்ற இஸ்லாமிய கதாபாத்திரங்களின் நடித்து பரபரப்பு வளையத்தில் சிக்கினார்கள். நேஹா சக்சேனாவும் இந்த படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
819 days ago
819 days ago