உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம்

இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம்

நடிகர் அர்ஜுன் 90களின் காலகட்டத்தில் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தவர். தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக முன்னணி ஹீரோக்களின் படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல மற்ற மொழி படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் அர்ஜுன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ஜாக் டேனியல் என்கிற படத்தில் திலீப்புடனும், மரைக்கார் என்கிற படத்தில் மோகன்லாலுடனும் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் மலையாளத்தில் உருவாகி வரும் விருன்னு என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன் இணைந்து நடிகை நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். ஆக்சன் படங்களை இயற்றுவதற்கு பெயர் பெற்ற இயக்குனர் கண்ணன் தாமரைக் குளம் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட இந்த படம் தற்போது விரைந்து முடிக்கப்படும் விதமாக வேகம் எடுத்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !