வெற்றி பட இயக்குனர் உடன் கைகோர்த்த பஹத் பாசில்
ADDED : 867 days ago
நடிகர் பஹத் பாசில் தற்போது ரொமான்ஜம் படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மன்சூர் அலிகான், ஆசிஷ் வித்யார்த்தி, பிரனவ் ராஜ், பூஜா மோகன்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கல்லூரி கதை களத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்திற்கு சுசின் ஷாம் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஆவேசம் என்று தலைப்பு வைத்துள்ளனர். அன்வர் ரசித் மற்றும் நஸ்ரியா பஃகத் பாசில் இணைத்து தயாரிக்கும் இந்த படம் அடுத்த வருடம் ஜனவரி 26 அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.