உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யின் லியோ படத்தில் இணைந்த மடோனா!

விஜய்யின் லியோ படத்தில் இணைந்த மடோனா!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் அவருடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா நடிக்க, இன்னொரு முக்கிய வேடத்தில் பிரியா ஆனந்த் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த லியோ படத்தில் பிரேமம் படத்தில் நடித்த நடிகைகளில் ஒருவரான மடோனா செபஸ்டியனும் நடிப்பதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலில் மடோனா செபஸ்டின் நடனமாடி இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த பாடலையும் அனிருத் இசையில் அவரே பின்னணி பாடியிருப்பதாகவும் கூறுகிறார்கள். இவர் தமிழில், காதலும் கடந்து போகும், கவண், பா. பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும் உள்பட பல படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !