ஓடிடியில் வெளியாகும் தங்கல் பட இயக்குனரின் படம்
ADDED : 886 days ago
தங்கல் பட இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் பவால். இதில் வருண் தவான், ஜான்வி கபூர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் பரவியது. ராணுவம் பின்னணியில் காதல் கலந்த படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடந்து வந்தன. இந்த நிலையில் ஜூலை மாதத்தில் நேரடியாக இந்த படம் அமேசான் ஓடிடி தளத்தின் மூலமாக 200 நாடுகளில் வெளியாகும் என்று படக்குழுவினர்கள் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். ஆனால் தேதியை குறிப்பிடவில்லை.