கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறைவு செய்த சிவராஜ் குமார்!
ADDED : 884 days ago
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் படம், 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இப்போது குற்றாலத்தில் நடைபெறும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் இன்றோடு நடிகர் சிவராஜ் குமார் சம்மந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்ததாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இந்த மாதத்தின் இறுதிக்குள் தனுஷ் சம்மந்தப்பட்ட காட்சிகளும் நிறைவு பெறும் என்கிறார்கள்.