இதற்கு மேல் சொன்னால் கொன்றே விடுவார்கள் - காஜல்
ADDED : 856 days ago
நடிகை காஜல் அகர்வால் திருமணம், குழந்தை பிறப்புக்கு பின்னரும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ‛இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் இரண்டு, மூன்று படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தியன் 2 படம் தொடர்பாக காஜல் கூறுகையில், ‛‛இந்த படத்தில் எனக்கு முக்கியமான ஒரு வேடம். இதற்கு முன் இப்படி ஒரு வேடத்தில் நான் நடித்தது இல்லை. வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இதைத் தாண்டி வேறு எதுவும் இப்போது சொல்ல முடியாது. மீறி சொன்னால் படக்குழுவினர் என்னை கொன்றே விடுவார்கள்'' என சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.