மேலும் செய்திகள்
மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன்
833 days ago
முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம்
833 days ago
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
833 days ago
சென்னை : நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் பாடலான ‛‛நா ரெடி'' நேற்று வெளியானது. இதில் அரசியல் தொடர்பான வரிகளுடன் சாராயம், பீடி, சுருட்டு, புகையிலை, சூதாட்டம் போன்றவற்றையும் ஊக்கப்படுத்துவது போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லியோ'. அக்டோபர் மாதம் இப்படம் வெளியாக உள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (ஜூன் 22) இப்படத்தின் முதல் சிங்கிளான 'நா ரெடி' பாடலை வெளியிட்டனர். இரு நாட்களுக்கு முன்பே அந்த படத்தின் முன்னோட்ட பாடலை வெளியிட்டனர். அதில்,
“நா ரெடி தா வரவா, அண்ணன் நா எறங்கி வரவா…
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா…
எவன் தடுத்து என் ரூட்டு மாறாதப்பா..
தெரண்டடிக்குற பறை அடிக்கணு, நா ஆட தான்..
வெரலடிக்குற தீ பந்தம் நா ஏத்த தான்..,” என வரிகள் உள்ளன.
“இறங்கி வரவா, சிங்கத்த சீண்டாதப்பா, தடுத்தாலும் ரூட்டு மாறாதப்பா, தீ பந்தம் நா ஏத்த தான்” ஆகிய வார்த்தைகளில் உள்ள அரசியல் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விஜய் ரசிகர்களும் கொண்டாடினர்.
நேற்று படத்தின் முழு பாடலும் வெளியானது. 4:14 நிமிடங்கள் ஒலிக்கும் இந்த பாடலை விஷ்ணு எழுத, நடிகர் விஜய் பாடி உள்ளார். அவருடன் அனிருத் மற்றும் அசல் கோலாரும் இடையிடையே குரல் கொடுத்துள்ளனர். துள்ளல் பாடலாக வெளியாகி உள்ள இதில் விஜய் உடன் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களும் ஆடி உள்ளனர்.
நடிகர் விஜய் எதிர்காலத்தில் அரசியலுக்கு வர உள்ள நிலையில் அதை வெளிப்படுத்தும் விதமான வரிகள் அமைந்துள்ளன. அதை விட பாடல் முழுக்க புகை பிடித்தபடியும், ஆடு, சாராயம், பீடி, சுருட்டு, புகையிலை, சூதாட்டம், தொடர்பான போதை நெடி வரிகளும் இடம் பெற்றுள்ளன.
பத்தாது பாட்டில் நா குடிக்க
அண்டாவை கொண்டாங்க சியர்ஸ் அடிக்க
மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெளில வருவான் பார்
ஆகிய வரிகளும் இடம் பெற்றுள்ளன.
நிஜத்தில் அப்படி... சினிமாவில் இப்படி...
கடந்த வாரம் கல்வி உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களிடம் விஜய் பேசும்போது, ‛‛கல்வி முக்கியம் அதை விட உங்களின் கேரக்டர் மற்றும் சிந்திக்கும் திறனுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். வாழ்க்கையில் என்ஜாய் பண்ணுங்க, ஆனால் உங்களின் சுய அடையாளத்தை இழந்துவிடாதீர்கள். எல்லா தலைவர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். காசு வாங்கி ஓட்டு போடாதீங்க என உங்கள் பெற்றோர்களிடம் சொல்லுங்க'' என்றெல்லாம் வண்டி வண்டியாக அறிவுரை வழங்கினார்.
இப்படி அறிவுரை கூறிவிட்டு படத்தில் சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் தீய பழக்கங்களை ஊக்குவிப்பது போல் வரிகள் வைத்திருப்பதற்கு விஜய் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நிஜத்தில் சொல்வது ஒன்று, பணத்துக்காக செய்வது வேறு என அவர் மீது விமர்சனங்கள் எழ தொடங்கின. கடந்த வாரம் லியோ போஸ்டர் வெளியான போது அதில் புகை பிடித்த காட்சிகள் இடம் பெற்றதற்கு பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள விஜய், எதிர்காலத்தில் முதல்வர் கனவோடும் இருந்து கொண்டு இருக்கும் இவர், சினிமாவில் இதுபோன்ற கருத்துக்களை தவிர்க்கலாமே என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
833 days ago
833 days ago
833 days ago