உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்திகை தீபம் சீரியலில் விஜயகுமார் என்ட்ரி

கார்த்திகை தீபம் சீரியலில் விஜயகுமார் என்ட்ரி

தமிழ் திரையுலகில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் கலக்கியவர் நடிகர் விஜயகுமார். சின்னத்திரையிலும் 'தங்கம்', 'வம்சம்', 'நந்தினி' உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஜீ தமிழில் ஒளிபரப்பான 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி' தொடரில் நாட்டாமையாக கெஸ்ட் ரோலில் நடித்திருந்த, அவர் தற்போது மீண்டும் அதே சேனலில் ஒளிபரப்பாகும் 'கார்த்திகை தீபம்' என்ற தொடரில் ஜமீனாக என்ட்ரி கொடுத்துள்ளார். கார்த்திகை தீபம் தொடரில் விஜயகுமாரின் என்ட்ரி பில்டப்புடன் புரோமோவாக வெளியாகியுள்ள நிலையில், அவர் நடிக்கும் எபிசோடுகள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !