சொன்ன தேதிக்கு முன்பே வெளியாகும் போயபட்டி - ரெப்போ படம்
ADDED : 931 days ago
அகண்டா படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் போயபட்டி சீனு இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு போயபட்டி ரெப்போ என்று தற்காலிக தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலா நடித்து வருகிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். ஏற்கனவே, இந்த படம் துஷாரா அன்று வெளியாகும் என்று தெரிவித்த நிலையில் தற்போது ஒரு சில காரணங்களால் இந்த படத்தை ஒரு மாதம் முன்பாகவே வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் தெரிவித்துள்ளனர்.