உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விவாகரத்து செய்யப் போகிறாரா அசின்?

விவாகரத்து செய்யப் போகிறாரா அசின்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அசின். 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படம் மூலம் தமிழில் அறிமுகமான அசின், “கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு, ஆழ்வார், போக்கிரி, வேல், தசாவதாரம், காவலன்” ஆகிய படங்களில் நடித்தார். குறுகிய காலத்திலேயே திரையுலகத்தை விட்டு விலகி மைக்ரோமேக்ஸ் மொபைல் கம்பெனியின் இணை நிறுவனரான ராகுல் சர்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடி பதிவுகளை பதிவிட்டு வரும் கடந்த சில மாதங்களாக எந்த ஒரு பதிவையும் இடவில்லை. மேலும், அவரது கணவருடன் இருந்த சில புகைப்படங்களை அவர் அத்தளத்திலிருந்து நீக்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என அசின் ரசிகர் பக்கம் ஒன்று தெரிவித்துள்ளது. அசின் குறிப்பிட்ட இடைவெளியில் பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இருந்தாலும் ஊடகங்களில் அசின் அவரது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்யும் எண்ணத்தில் இருக்கிறார். ராகுலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால்தான் அசின் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்றும் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !