உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொலை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

கொலை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‛பிச்சைக்காரன் 2'. இப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த சில படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்தும் ரிலீஸில் தாமதமாகி வருகிறது. தற்போது அதில் ஒரு படமான ‛கொலை' ரிலீஸாக தயாராகி உள்ளது. இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்பைனட் பிலிம்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே நிறைவு பெற்றது. இந்த நிலையில் இந்த படம் வருகின்ற ஜூலை 21ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்படம் தெலுங்கில் ஹட்யா என்ற தலைப்பில் அன்றைய தினமே வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !