உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சரவெடியாக இருக்கும் : பாராட்டிய தனுஷிற்கு உதயநிதி நன்றி

சரவெடியாக இருக்கும் : பாராட்டிய தனுஷிற்கு உதயநிதி நன்றி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நாளைக்கு(ஜூன் 29) இந்த படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் இந்த படத்தை பார்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், மாரி செல்வராஜின் மாமன்னன் படம் உணர்ச்சிபூர்வமானது. வடிவேலு மற்றும் உதயநிதி உறுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் திறமையான நடிப்பை கொடுத்துள்ளனர். இடைவேளை காட்சிகள் சரவெடியாக இருக்கும். இறுதியாக ஏ.ஆர்.ரகுமான் இசை மிகவும் அழகாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு உதயநிதி, நன்றி தனுஷ் எல்லாவற்றுக்கும், உங்களுடைய ஒத்துழைப்பு அல்லாமல் மாமன்னன் படம் உருவாகி இருக்காது என பதிலளித்துள்ளார்.
இந்த படத்துக்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ள நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் 156 நிமிடங்கள் என்று தற்போது படக்குழு ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், 2 மணி நேரம் 36 நிமிடங்கள் ஓடக்கூடியதாக மாமன்னன் படம் உருவாகி இருக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !