மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
798 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
798 days ago
வருகிற 3ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனனில் பேரழகி 2, மற்றும் அர்ச்சனை பூக்கள் என்கிற இரண்டு புதிய தொடர்கள் ஒளிரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை 'பேரழகி 2' தொடர் இரவு 8.30 மணிக்கும், 'அர்ச்சனை பூக்கள்' தொடர் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இந்த இரண்டு தொடர்களும் கன்னடத்தில் ஒளிபரப்பான 'லக்ஷனா' மற்றும் 'பாக்யலட்சுமி' தொடர்களின் டப்பிங் வெர்சனாகும்.
'பேரழகி 2' தொடரில் விஜயலட்சுமி, சுக்ருதான நாக் நடித்துள்ளனர். இந்த இருவரை சுற்றி நடக்கும் கதை. இருவரையும் 23 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் மாற்றி வைத்து விடுகிறார். இதில் விஜயலட்சுமி கருப்பாக இருப்பதால் அவரை மகளாகவும், பேத்தியாகவும் அவரது தந்தை மற்றும் அவரது தாயாரால் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை சகித்துக் கொண்டு தொலைக்காட்சி தொகுப்பாளராக வேண்டும் என்று கனவு காண்கிறார். அது நிறைவேறியதா என்பது கதை.
அர்ச்சனை பூக்கள் இரு சகோதரிகளின் கதை, சுதர்ஷன் ரங்கபிரசாத் சுஷ்மா கே.ராவ் நடித்துள்ளனர். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சகோதரிகள் எப்படி ஒருவரை ஒருவர் கைதூக்கி விட்டு காப்பாற்றுகிறார்கள் என்பது கதை.
798 days ago
798 days ago