ராம் சரண் குழந்தையின் பெயர் 'க்லின் காரா கொனிடலா'
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் கதாநாயகனான சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரணுக்குக் கடந்த பத்து நாட்களுக்கு ஜுன் 20ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இன்று(ஜூன் 30) பெயர் சூட்டு விழா நடைபெற்றது. அவர்களது வீட்டில் இன்று குடும்பத்தினர், சில முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள விழா நடந்தது.
குழந்தைக்கு 'க்லின் காரா கொனிடலா' எனப் பெயர் சூட்டியுள்ளார்கள். “லலித சஹஸ்ரநாமத்திலிருந்து இப்பெயர் எடுக்கப்பட்டுள்ளது. க்லின் காரா என்பது இயற்கையின் உருவகத்தை பிரதிபலிக்கிறது. குட்டி இளவரசி வளரும் போது இந்த குணங்களை தன் ஆளுமையில் உள் வாங்குவார் என்று நாங்கள் அனைவரும் உறுதியாக நம்புகிறோம்,” என்று அப் பெயர் வைத்ததற்கான காரணத்தை டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார் சிரஞ்சீவி.
சிரஞ்சீவி, ராம் சரண் ரசிகர்கள் 'MegaPrincess' எனக் குறிப்பிட்டு, குழந்தைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து டுவிட்டரில் டிரென்ட் செய்து வருகின்றனர்.