உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாபா பிளாக் ஷிப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாபா பிளாக் ஷிப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பேச்சாளரும், நடிகருமான ராஜ் மோகன் முதல் முறையாக இயக்கியுள்ள திரைப்படம் பாபா பிளாக் ஷிப். இதில் அம்மு அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், அப்துல் அயாஸ் , நரேந்திர பிரசாத் மற்றும் ப்ளாக் ஷிப் குழுவினர் பலர் நடித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த படம் வருகின்ற ஜூலை 14ம் தேதி அன்று வெளியாகும் என்று படக்குழுவினர்கள் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !