உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தள்ளிப் போகும் 'மார்க் ஆண்டனி'

தள்ளிப் போகும் 'மார்க் ஆண்டனி'

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் டீசர் இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியாகி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

'டைம் மிஷின்' படத்தின் மையக் கருவாகவும், அதை வைத்து ஒரு ஆக்ஷன் படத்தை உருவாக்கியிருப்பதாகவும் டீசர் ஓரளவிற்குப் படத்தைப் பற்றி யூகிக்க வைத்தது. தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ரித்து, அபிநயா என படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருமே மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படம் இந்த மாதம் ஜுலை 28ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது படத்தின் வெளியீட்டை செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராகவா லாரன்ஸ் கங்கனா ரணாவத் மற்றும் பலர் நடிக்கும் 'சந்திரமுகி 2' படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் 'மார்க் ஆண்டனி' வெளியாகலாம் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !