உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் படத்தின் முதல் பாடல் 'காவாலா': ஜூலை 6ல் வெளியீடு

ஜெயிலர் படத்தின் முதல் பாடல் 'காவாலா': ஜூலை 6ல் வெளியீடு

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, சிவராஜ் குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளியானது. 'காவாலா' எனத் துவங்கும் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !