ராஜலெட்சுமி வீட்டு திருமணத்தில் ஒன்றாக இணைந்த பாக்கியலெட்சுமி குழுவினர்
ADDED : 826 days ago
சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை ராஜலெட்சுமி. இவருக்கு ரோகித், ராகுல் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ராஜலெட்சுமியின் மூத்த மகன் ரோகித்துக்கு அண்மையில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண நிகழ்வில் பாக்கியலெட்சுமி சீரியலில் ராஜலெட்சுமியுடன் சேர்ந்து நடித்து வரும் ரேஷ்மா, சதீஷ், கம்பம் மீனா செல்லமுத்து, திவ்யா கணேஷ், நேஹா மேனன், ரோசரி, வீஜே விஷால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். கம்பம் மீனா செல்லமுத்து தனது இன்ஸ்டாவில் அந்த புகைப்படங்களை பதிவிட அவை வைரலாகின.