உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோகனுடன் நடிக்கும் வனிதா

மோகனுடன் நடிக்கும் வனிதா

தாதா 87, பவுடர் படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ அடுத்து இயக்கும் படம் ஹரா. இந்த படத்தில் பல வருடங்களுக்கு பிறகு மோகன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார். இவர்கள் தவிர யோகிபாபு, சாருஹாசன் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தில் வனிதாவும் இணைந்திருக்கிறார்.

வீடுகளுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மோகனுடன் இணைந்து பணியாற்றுகிறவராகவும், அவரது நண்பராகவும் வனிதா நடிக்கிறார். மோகனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வனிதா வெளியிட்டு, “நான் மோகனின் தீவிரமான ரசிகை. அவருடன் இணைந்து நடிப்பதன் மூலம் எனது பல நாள் கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !