நிறைவு பெற்றது தங்கலான் படப்பிடிப்பு
ADDED : 824 days ago
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான். பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பா.ரஞ்சித் இயக்குகிறார். கேஜிஎப் பின்னணியில் தமிழர்களை மையமாக வைத்து ப்ரீயட் படமாக இந்த படம் உருவாகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. மொத்தம் 118 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததை நடிகர் விக்ரம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதில் முதல் நாள் படப்பிடிப்பு மற்றும் இறுதிநாள் படப்பிடிப்பின் போது எடுத்த போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.