லப்பர் பந்து படத்தின் டப்பிங் பணி துவங்கியது
ADDED : 822 days ago
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரும் இணைந்து நடித்து வரும் படம் லப்பர் பந்து. சஞ்சனா, பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க, நெஞ்சுக்கு நீதி பட வசனகர்த்தா தமிழரசன் பச்சமுத்து முதல் முறையாக இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார் என கூறப்படுகிறது. ஸ்டிரீட் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து இன்று(ஜூலை 7) படத்தின் டப்பிங் பணிகளை பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.