2.0 படத்தை முந்திய லியோ
ADDED : 792 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், கவுதம் மேனன், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு படம் திரைக்கு வருகிறது. தற்போது படத்தின் பிஸ்னஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேரளா தியேட்டர் உரிமையை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்பு தமிழில் இருந்து அதிக விலைக்கு 2.0 படம் ரூ. 14 கோடிக்கு கேரளாவில் வியாபாரம் ஆனது. இப்போது லியோ படத்தின் கேரள உரிமை ரூ. 16 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் 2.0 படத்தின் கேரளா வியாபாரத்தை லியோ முந்தி உள்ளது.