மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
790 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
790 days ago
தமிழ் இயக்குனராக அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஜவான்'. இப்படம் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
2 நிமிடம் 16 வினாடிகள் கொண்ட இப்படத்தின் டிரைலருக்கு சென்சார் நடந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டிரைலரைப் பார்த்தவர்கள் அது குறித்து மிகவும் பாராட்டி வருகிறார்கள். பிரம்மாண்டமான படைப்பாகவும், மிரட்டலான விஎப்எக்ஸ் காட்சிகளுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அடுத்த வாரம் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் வெளிவந்த டிரைலர்களின் சாதனையை மிக எளிதில் 'ஜவான்' டிரைலர் முறியடித்துவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹிந்தியைப் பொறுத்தவரையில் பிரபாஸ் நடித்து வெளிவந்த 'ஆதி புருஷ்' டிரைலர் 24 மணி நேரத்தில் 52 மில்லியன் சாதனை படைத்து முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை சில மணி நேரங்களிலேயே 'ஜவான்' முறியடித்து விடும் என எதிர்பார்க்கிறார்கள்.
790 days ago
790 days ago