தெலுங்கில் அறிமுகமாகும் தர்ஷனா
ADDED : 861 days ago
மதுமிதா இயக்கிய 'மூணே மூணு வார்த்தை' படத்தின் மூலம் அறிமுகமானவர் தர்ஷனா ராஜேந்திரன். அதன் பிறகு கவண், இரும்புதிரை, தீவிரம் படங்களில் நடித்தார். தமிழில் சரியான வாய்ப்புகள் இன்றி மலையாளத்திற்கு சென்றவர் அங்கு முன்னணி நடிகை ஆனார். இதுதவிர வெப் தொடரிலும் நடித்துள்ளார். இப்போது தெலுங்கில் அறிமுகமாகிறார்.
பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் இன்னொரு நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. தர்ஷனா ராஜேந்திரன் நடிகை என்பதுடன் நல்ல பாடகியாகவும் இருக்கிறார். மாயநதி, சர்காஸ் சிர்கா 2020, ஹிருதயம், ஜெய ஜெய ஜெய ஜெயஹே போன்ற படங்களில் பாடியுள்ளார். விரைவில் தமிழ் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.