என்றென்றும் கே.பி : இந்த மாதம் முழுவதும் ஒளிபரப்பாகிறது
ADDED : 828 days ago
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை இயக்குனர் கே பாலசந்தர். நடிகர்கள் கமல், ரஜினி என்கிற பெரும் திரையாளுமைகளை உருவாக்கியவர். 100 மேற்பட்ட படங்களை இயக்கி, 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர். தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர் கே.பாலச்சந்தர். இந்திய சினிமாவின் பிதாமகர் கே.பாலச்சந்திரன் பிறந்த மாதத்தை (ஜூலை) கொண்டாடும் வகையில் புதுயுகம் டி.வி.யில் இந்த மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் காலை 9 மணிக்கு 'என்றென்றும் கே.பி' என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் பல சினிமா நட்சத்திரங்கள் நேரலையில் பங்கேற்று, அவர் பற்றிய சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள். கே.பாலச்சந்தரின் படங்கள் குறித்து அபூர்வ தகவல்கள் இடம் பெறுகிறது.