உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளரிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்த சுதீப்

தயாரிப்பாளரிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்த சுதீப்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வரும் கிச்சா சுதீப் அதை தாண்டி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் கூட நடித்து வருகிறார். தற்போது தாணு தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சுதீப். இந்த நிலையில் பிரபல கன்னடத் தயாரிப்பாளரான எம்.என்.குமார் என்பவர், சுதீப் தனது தயாரிப்பில் படம் நடிப்பதாக பணம் வாங்கிக்கொண்டு நடிக்க மறுத்து வருகிறார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார். கன்னட திரையுலகில் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக வேண்டுமென்றே தன் மீது அவதூறு கூறியுள்ளார் என்று தயாரிப்பாளர்கள் எம்.என்.குமார் மற்றும் எம்.என்.ரவி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் சுதீப். இதில் இவர்கள் தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பத்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு தொகையாக வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார் கிச்சா சுதீப்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !