மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ‛கியூட்' படங்களை பகிர்ந்த சிவகார்த்திகேயன்
ADDED : 864 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்துள்ள ‛மாவீரன்' படம் ஜூலை 14ல் வெளியாகிறது. அவர் நடித்துள்ள மற்றொரு படமான அயலான் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. தற்போது கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராணுவ வீரனாக நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனுக்கு ஆர்த்தி என்ற மனைவியும், ஆராதானா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ளனர். குகனுக்கு இன்று(ஜூலை 12) இரண்டாவது பிறந்தநாள். இதுதொடர்பாக குடும்பத்தினர் உடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து, “பிறந்த நாள் வாழ்த்துகள் டா தம்பி” என்று குறிப்பிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனின் இந்த குடும்ப போட்டோ சமூகவலைதளத்தில் வைரல் ஆனதோடு குகனுக்கு ஏராளமான பேர் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.