ஜூலை 17ல் ஜெயிலர் இரண்டாவது பாடல் ரிலீஸ்
ADDED : 928 days ago
நெல்சன் இயக்கத்தில் ரஜினி, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரும் உள்ள இந்த படத்தின் முதல் சிங்கிளான ‛காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்து இரண்டாவது பாடலாக குக்ஹூம் இது டைகரின் கட்டளை என்று தொடங்கும் பாடலை ஜூலை 17ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். காவாலா பாடலின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், அடுத்த பாடலும் வெளியாக இருப்பதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் காணப்படுகிறார்கள்.