மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
787 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
787 days ago
முக்கியமான பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு நீலகிரி மாட்டத்தில் குறிப்பாக ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சொந்த இடம் மற்றும் பங்களாக்கள் இருக்கிறது. சீசன் காலங்களில் அவர்கள் இங்கு வந்து ரகசியமாக தங்கி விட்டுச் செல்வார்கள். அதன்படி பாலிவுட் நடிகை பூஜா பட் 1990ம் ஆண்டு கோத்தகிரியில் உள்ள ஜெகதாலா என்ற மலைகிராமத்தில் இடம் வாங்கி உள்ளார்.
இந்த இடத்தை 1978ம் ஆண்டு எஸ்.சி பிரிவைச் சேர்ந்த எம்.குப்பன் என்பவருக்கு நிலத்தை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் மாவட்ட கலெக்டர் ஒரு ஏக்கர் நிலம் வழங்கியுள்ளார். இந்த நிலம் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ அவர்கள் மட்டுமே இந்த நிலத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கூடுதல் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிபந்தனைகளை மீறி இந்த நிலத்தை சுப்பிரமணி என்பவருக்கு குப்பன் விற்றுள்ளார். அதன்பிறகு சுப்பிரமணி ராமசாமிக்கு விற்றுள்ளார்.
இவ்வாறு பலர் வாங்கி இறுதியாக இந்த நிலத்தை பூஜா பட் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை அவர் வாங்கியது செல்லாது எனவே நிலத்தை அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பூஜா பட், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் “எஸ்.சி பிரிவினருக்காக வழங்கப்பட்ட நிலத்தை நடிகை பூஜாபட் வாங்கியது செல்லாது. இதுகுறித்து கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு செல்லும்” என்று தீர்ப்பு அளித்துள்ளது. அப்போது சில லட்சம் கொடுத்து பூஜா பட் இந்த நிலத்தை வாங்கியுள்ளார். இப்போது அதன் மதிப்பு பல கோடி என்பதால் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய பூஜா பட் தரப்பு முடிவு செய்திருக்கிறது.
787 days ago
787 days ago