உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்வானந்த் புதிய பட அப்டேட்

சர்வானந்த் புதிய பட அப்டேட்

தெலுங்கு நடிகர் சர்வானந்த் தெலுங்கு படங்களை தாண்டி தமிழிலும் எங்கேயும் எப்போதும், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை, கணம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அந்த தகவலின் படி, நான்காவது முறையாக யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சர்வானந்த் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை லுசர் படத்தை இயக்கிய அபிலாஷ் ரெட்டி இயக்குகிறார். பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ள இந்த படம் 90 காலகட்ட பின்னனியில் நடக்கும் குடும்ப படமாக உருவாகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !