ரஞ்சிதமே: புதிய தொடர் 17ம் தேதி முதல் ஒளிபரப்பு
ADDED : 822 days ago
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்த மனிஷாஜித் ஏற்கனவே சின்னத்திரையில் நடித்துள்ளார். தற்போது ரஞ்சிதமே என்ற தொடரில் நடித்து வருகிறார். இதில் சதீஷ் நாயகனாக நடிக்கிறார். இவர்கள் தவிர ரூபாஸ்ரீ, ராம்ஸ், ஹரிநந்தன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மகன் திருமணமாகி சென்று விட்டால் தனிமரமாகி விடுவோமோ என்று தாய் தவித்துக் கொண்டிருக்கும்போது அதே வீட்டுக்கு அக்கா கணவரால் துன்புறுத்தப்படும் நாயகி ரஞ்சிதா வந்து சேர்கிறார். அதன் பிறகு நடக்கும் உணர்வு போராட்டம்தான் தொடரின் கதை. ரஞ்சிதாவாக மனிஷாஜித்தும், மாமியாராக ரூபாஸ்ரீயும், நாயகனாக சதீஷூம், நடித்திருக்கிறார்கள். வருகிற திங்கள் கிழமையிலிருந்து (17ம் தேதி) திங்கள் முதல் வெள்ளி வரை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.