பிரபல நிறுவனத்துடன் கைகோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
ADDED : 897 days ago
நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை தாண்டி முதன்மைத் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் முதன்மைத் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த பர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் வசூல் ரீதியாக தோல்வி படமானது.
ஆனாலும், ஜஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் அடுத்த படத்தில் முதன்மைத் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஓ மை கடவுளே, ராட்சசன், பேச்சலர் போன்ற படங்களை தயாரித்த ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் ஜஸ்வர்யா ராஜேஷை முதன்மைத் கதாபாத்திரத்தில் வைத்து இரண்டு படங்கள் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஒரு படத்திற்கு ரூ.1.50 கோடி சம்பளம் என இரண்டு படங்களுக்கு ரூ.3 கோடி ஜஸ்வர்யா ராஜேஷ் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.