மீண்டும் மணிரத்னம் உடன் இணைந்த திரிஷா!
ADDED : 896 days ago
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு திரிஷா மார்க்கெட் உயர்ந்துள்ளது. தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் த்ரிஷா நடிப்பதாக தகவல் உள்ளது. இது அல்லாமல் முதன்மை கதாபாத்திரங்கள் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இப்போது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் திரிஷா ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.