மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
781 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
781 days ago
முன்னணி மலையாள நடிகை ஹனிரோஸ். தமிழில் முதல் கனவே என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு சிங்கம்புலி, மல்லுகட்டு, காத்தவராயன், பட்டாம்பூச்சி படங்களில் நடித்தார். கடைசியாக ஆதியுடன் அவர் நடித்த 'சரித்திரம்' படம் வெளிவரவில்லை. சமீபகாலமாக தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சோலோ ஹீரோயினாக நடித்து வரும் படம் ரேச்சல். இந்த படத்தை ஆனந்தி பாலா இயக்குகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த போஸ்டரில் மாட்டுக்கறியை ரத்தம் சொட்டச் சொட்ட, ஹனிரோஸ் வெட்டும் காட்சி இருக்கின்றன. இந்த பர்ஸ்ட் லுக் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பான் இந்தியா படமாக உருவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்தியா முழுக்க பசு பாதுகாப்பு தீவிரமாகி வருகிறது. மாட்டு இறைச்சிக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாட்டுக்கறி வெட்டுவது போன்ற காட்சியை வைத்து சம்பந்தப்பட்டவர்களின் மனதை புண்படுத்தலாமா என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநில பாரதிய ஜனதா நேரடியாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
781 days ago
781 days ago