உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புது கார் வாங்கிய எதிர்நீச்சல் ஜனனி

புது கார் வாங்கிய எதிர்நீச்சல் ஜனனி

சின்னத்திரையில் ஹிட் அடித்து வரும் 'எதிர்நீச்சல்' தொடரில் கதாநாயகியாக மதுமிதா நடித்து வருகிறார். முன்னதாக தமிழ் சின்னத்திரையில் இவரது என்ட்ரி பாசிட்டிவாக இல்லையென்றாலும், எதிர்நீச்சல் தொடர் மதுமிதாவுக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்துள்ளது. இதனால், சின்னத்திரையில் இவரது மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது. தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சீரியல் நடித்து வரும் மதுமிதா, தனது சுய உழைப்பில் கிடைத்த வருமானத்தில் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது குடும்பத்தாருடன் கார் வாங்குவதை வீடியோவாக எடுத்துள்ள மதுமிதா அதனை தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். அவர் வாங்கியுள்ள சொகுசு ரக காரின் விலை 17 முதல் 18 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் 'கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி' என மதுமிதாவுக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !