ஜப்பானில் வசூல் வேட்டை நடத்தும் ரங்கஸ்தலம்
ADDED : 825 days ago
கடந்த 2018ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண், சமந்தா, ஆதி, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படம் ரங்கஸ்தலம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார் . இந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தை ஜப்பானில் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் வெளிவந்த முதல்நாளில் இந்திய படங்களில் அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. முதல்நாளில் இந்தபடம் 2.5 மில்லியன் ஜப்பான் யென்(இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.14 லட்சம்) தொகையை வசூலித்தது. இதையடுத்து முதல் மூன்று நாட்களில் ரூ.60 லட்சம் வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.