சல்மான்கான் பெயரில் பண மோசடி : சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
ADDED : 810 days ago
பாலிவுட் நடிகர் சல்மான்கான் பெயரில் படம் எடுப்பதாகவும், அதற்கு நிதி உதவியாளர்களை அழைத்தும், நடிகர், நடிகைகளை தேர்வு செய்தும் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து கோடி கணக்கில் மோசடி செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து சல்மான்கான் கவனத்துக்கு கொண்டு சென்றதும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சல்மான்கான் தனது டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர், “எனது பெயரில் படம் எடுப்பதாக கூறி குறுந்தகவலும், மெயிலும் அனுப்பி மோசடி நடந்து வருகிறது. இதில் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இந்த மோசடியில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரித்துள்ளார்.