பிரஜினின் 25வது படத்தின் பர்ஸ்ட் லுக்
ADDED : 1044 days ago
விஜய் டிவியில் சின்னத்தம்பி சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் நடிகர் பிரஜின். சீரியல் இல்லாமல் படங்களிலும் ஹீரோவாக நடித்து வந்தார் தற்போது 25வது படத்தை எட்டியுள்ளார். ராம் பிரபா இயக்கத்தில் பிரஜினின் 25வது படமாக உருவாகி வரும் படம் தரைப்படை. இதில் விஜய் டிவி ஜீவா, விஜய் விஷ்வா, ஷாலினி, மோகனா சித்தி, சாய் தன்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் தலைப்பு வெளியானதை தொடர்ந்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர்.