உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருண் விஜயை இயக்கும் முத்தையா

அருண் விஜயை இயக்கும் முத்தையா

நடிகர் அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிக்க கதை கேட்டு வந்த நிலையில் கொம்பன் முத்தையா அருண் விஜய்யிடம் அதிரடியான ஆக்ஷன் கதையை கூறியுள்ளார். அருண் விஜய்க்கு இந்த கதை பிடித்து போனதால் முத்தையா இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தை 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !