உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த திவ்யா பாரதி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த திவ்யா பாரதி

ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த பேச்சிலர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யா பாரதி. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தாயாருடன் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதையடுத்து கோயிலுக்கு வெளியே வந்து அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் திவ்யா பாரதி. அதில் புடவை கெட்டப்பில், கையில் பூக்கள் நிறைந்த தாம்பூலத்துடன் மங்களகரமாக அவர் நிற்பதை பார்த்த ரசிகர்கள், ஒன்பது லட்சம் லைக்ஸ் மற்றும் அவர் அழகை வர்ணித்து பலவிதமான கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !